2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

மூதூர் - கெளியாமுனை வீதி 26 வருடங்களின் பின் பொதுமக்கள் பாவனைக்கு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 29 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை மாவட்டத்தில் மூதூரிலிருந்து கெளியாமுனை வரை செல்லும் பிரதான பாதை 26 வருடங்களின் பின்னர் பொதுமக்கள் பாவனைக்காக கடந்த வெள்ளிக்கிழமை திறந்து விடப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் சம்பூருக்கு செல்லும் மக்கள் பாலைநகரூடாகவே  பயணத்தை மேற்கொண்டு வந்தனர்.  

நெற்சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான கட்டடத்தில் கட்டைபறிச்சான இராணுவ முகாம் அமைக்கப்பட்டதன் காரணமாக பிரதான  பாதையூடாக பொதுமக்கள் பயணிக்க முடியாத நிலையேற்பட்டிருந்தது. இதனை அண்டியுள்ள 15 குடியிருப்புகளும் படையினரால்  முகாமாக  கொள்ளப்பட்டிருந்தது.

திருகோணமலை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி பிரிகேடியர் தர்சன  ஹெட்டியாராச்சியும் பிரதேச  செயலளார் எஸ்.செல்வநாயகமும் இணைந்து இவ்வீதியினை திறந்து வைத்தனர்.

இதேவேளை, இந்த வீதி திறக்கப்படவுள்ளதையிட்டு சம்பூர் மற்றும் மூதூர் பொலிஸாரின் அனுசரணையுடன் கட்டைபறிச்சான் மற்றும்  பாலைநகர் பொதுமக்கள் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X