2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

ஒரே பாடசாலையில் 8 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எஸ்.எஸ்.குமார்)

கிழக்கு மாகாண பாடசாலைகளில் 8 வருடங்களுக்கும் மேலாக  ஒரே பாடசாலையில் ஆசிரியராகவும், 5 வருடங்களுக்கு மேல் அதிபராகவும் கடமையாற்றுபவர்கள் விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.


2011ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இவர்கள் புதிய பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர். புதிய பாடசாலைகளுக்கு இடமாற்றம்  பெற்றுக்கொள்ள விரும்பும் இவ்ஆசிரியர்கள் தமது விண்ணப்பங்களை நாளை சனிக்கிழமைக்கு முன்னதாக வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


இதற்கான அறிவுறுத்தல் கடிதம் திருகோணமலையிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் வலயக் கல்வி அலுவலகத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--