2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

வெந்நீர் ஊற்றுப்பகுதியில் 9ஆவது நாளாகவும் சுத்திகரிப்பு இல்லை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசத்தில் ஒன்பதாவது நாளாக சுத்திகரிப்பு பணிகள் நடைபெறவில்லை என குறிப்பிடப்படுகிறது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அங்கு காட்சிக்கு வைத்திருந்த விளம்பர பலகையினை அறிவித்தல் இன்றி அகற்றிச் சென்றமையை கண்டித்தே பிரதேச சபையினால் சுத்திகரிப்பு பணிகள்  இடைநிறுத்தப்பட்டிருந்தன.

கடந்த 5ஆம் திகதி மாலை அரசாங்க அதிபர் இவ்விளம்பர பலகையை அகற்றிச் சென்றிருந்தார். இது விடயமாக கிழக்கு  மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு முறையிட்ட போதிலும் எதுவிதமான ஆக்கபூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பட்டணமும் சூழலும் பிரதேச சபைச் செயலாளர் த.காந்தரூபன் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .