2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

94 மில்லியன் ரூபா செலவில் தொகை மீன் சந்தை

Super User   / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

இத்தாலிய நாட்டு அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டவுள்ள திருகோணமலை தொகை மீன் சந்தையின் நிர்மாண வேலைகளை மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனரத்தன இன்று வியாழக்கிழமை ஆரம்பித்துவைத்தார்.

இந்நிகழ்வில் நீரியல் மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மதாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜய விக்கிரம,  கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் ஆரியவதி, திருகோணமலை மாவட்ட செயலாளர் மெஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா, திருகோணமலை நகர சபையின் தலைவர் க.செல்வராசா ஆகியோரு கலந்து கொண்டனர்.

திருகோணமலை நகர சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இச்சந்தை 60 வருடகால பழைமை வாய்ந்ததாகும்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள இப்பொதுச்சந்தை கட்டிடத்தில்  கீழ் தளத்தில் 64 கடைகளும், முதலாம் மாடியில் 32 அலுவலக தொகுதிகளும் அமைக்கப்பட உள்ளது.  அத்துடன் 25 தொன் மீன்களை குளீரூட்க்கூடிய வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.

இதற்காக 94 மில்லியன் ரூபாய்களை இத்தாலிய அரசு வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .