2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

அடை மழையால் பிந்திய விதைப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எப்.முபாரக்   

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாகப் பெய்த அடை மழையினையை அடுத்து கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட நெற் காணிகளில் பிந்திய விதைப்புகள்  விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளதாக பிரதேச செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

கந்தளாய்ப் பிரதேசத்தில்  16 ஆயிரத்து 200 ஏக்கர் நிலப் பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக் கப்படுகிறது.

இம்முறை பெய்த கடும் மழையால், கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதோடு,விவசாயிகளுக்கு நீர் த்தட்டுப்பாடு ஏற்படாது எனவும் விவசாயிகள் தெரிவிக் கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--