Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்
ஆளுநர் பதவியை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை பிரத்தியேகமாக அழைத்து வழங்கியதாகவும் தூர நோக்குடைய தலைவருடைய தலைமைத்துவத்தின் கீழ், கிழக்கு மாகாண ஆளுநர் பதவியைப் பொறுப்பேற்றமை மாபெரும் பாக்கியமாகக் கருதுவதாக, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார்.
தமது கடமைகளை, உத்தியோகபூர்வமாக இன்று (12) பெறுப்பேற்ற பின்னர் உரையாற்றிய போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
தன்னால் தமிழ் மொழியில் உரையாற்ற முடியாமல் போனமைக்கு வருந்துவதாகவும், குறுகிய காலத்தில் தமிழ் மொழியைக் கற்று உரையாற்றுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய வளங்களைப் பயன்படுத்தி சேவையாற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பௌத்த கலாசார மரபுரிமைகள் கொண்ட நாடாக இந்நாடு காணப்பட்ட போதும் ஏனைய இன மக்கள் கலாசாரங்களைப் பின்பற்றி கௌரவமான முறையில் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், நாட்டு நலன் கருதி, பாதைகளை, பொது இடங்களை இளைஞர்கள் அழகுபடுத்துகின்ற முயற்சிகளை சுயமாக மேற்கொண்டு வருவதாகவும் இம்முயற்சி நாட்டுக்கு முன்மாதிரியாக அமைகின்றது எனவும் தெரிவித்த ஆளுநர், “அதேபோல, கைவிடப்பட்ட காணிகளில் இளைஞர்கள் பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்” என்றும் தெரிவித்தார்.
இந்த முயற்சியை, அரச அதிகாரிகள், ஏனையவர்கள் முன்மாதிரியாகக் கொண்டு, நாட்டின் அபிவிருத்திக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கக் கூடியவர்களாக மாறவேண்டுமென்றும், மாகாண ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
23 minute ago
26 minute ago
28 minute ago