2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

குளவிக்கொட்டினால் 3 மாணவர்கள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2016 மே 18 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, கன்தமலாவ பகுதியில் குளவிக் கொட்டுக்குள்ளான பாடசாலை மாணவர்கள் மூன்று பேர், கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி பகுதியைச் சேர்ந்தவர்களான பீ.சதுனி (வயது 12) ஈ.தறூஷ (வயது 11), கே.சதறுவன் (வயது 12) ஆகியோரே குளவிக் கொட்டுக்குள்ளாகினர்.

இவர்கள் மூவரும் இன்று புதன்கிழமை காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் காணப்பட்ட புளியம்மரம் ஒன்றிலிருந்த குளவிக் கூட்டுக்கு இவர்களில் ஒருவர் கல் வீசியுள்ளார். இதனை அடுத்து, கூட்டிலிருந்த குளவிகள் கலைந்துவந்து இவர்களைக் கொட்டியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .