2020 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை

திருமலையிலும் அடைமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்,  அ.அச்சுதன், ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக் 

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாசனக் குளங்கள்,  ஏரிகள், நீர்நிலைகள்  என்பனவற்றின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர் மழை காரணமாக, தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்கள் என்பனவற்றின் தலைவர்கள், அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் வெள்ள நீர்க் கடலுக்குள் விடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதேவேளை, கடல் கொந்தளிப்புக் காரணமாக மூதூர், குச்சவெளி, புல்மோட்டை, திருகோணமலை மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மீன்பிடிப் படகுகள், வள்ளங்கள் என்பன கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், அன்றாடக் கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள்,  மீனவர்கள் ஆகியோரின் வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளது.

மூதூர் கிழக்கு, சம்பூர், தோப்பூர், கிளிவெட்டி, வெருகல் போன்ற கரையோரத்தை அண்டிய பகுதிகளிலுள்ள தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .