2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

’நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை பாவிக்கவும்’

Editorial   / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், கதிரவன், வடமலை ராஜ்குமார்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை பாவிக்குமாறு, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி எஸ்.சிறிதர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தில்  நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸைத் தடுப்பதற்கு மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில், அதனை தடுக்கும் முகமாக ஆயுர்வேத திணைக்களம் பாரிய முன்னெடுப்புகளை முன்னெடுத்து வருவதாகவும், அதில் ஒரு கட்டமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பாரிய மருந்து வகைகளை விநியோகம் செய்து வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். 

திருகோணமலை மாவட்டத்தில்  கிண்ணியா, நிலாவெளி, கப்பற்றுறை வைத்தியசாலைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், கபச்சுர குடிநீர், பிரண ஜீவனி, HERBAL FUMES போன்ற மருந்துளை பெற்றுக் கொள்ளுமாறும், அவர் தெரிவித்தார். 

இதேவேளை, இஞ்சி, வெள்ளைப் பூடு, கொத்தமல்லி, நெல்லி, சீந்தில் போன்றவற்றை நாளொன்றுக்கு 2 தடவைகள் குடிக்குமாறும் இலகுவான யோகாசனம் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுமாறும், பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .