2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

புறாக்களைத் திருடிய இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 14 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                

எட்டுப் புறாக்களைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 02 பேரை இம்மாதம் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எல்.ஜி.விஸ்வனாந்த பெர்னாண்டோ,  புதன்கிழமை (13) உத்தரவிட்டார்.    

21, 24 வயதுகளையுடைய இந்தச் சந்தேக நபர்கள் திருகோணமலை, உப்புவெளிப் பிரதேசத்தில் 08 புறாக்களைத் திருடியதாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் அப்புறாக்களின் உரிமையாளர் முறைப்பாடு செய்தார்.

இம்முறைப்பாட்டை அடுத்து கடந்த  செவ்வாய்க்கிழமை (12) இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  
                            

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .