2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

மாடுகளுக்கு நோய்; திருகோணமலை பண்ணையாளர்களும் பாதிப்பு

Princiya Dixci   / 2021 ஜனவரி 10 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாடுகளுக்கு ஒரு வகை தோல் நோய் ஏற்பட்டுள்ளமையால், மத்திய மற்றும் வடக்கு மாகாண கால்நடை பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை - தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள பண்ணையாளர்கள் இதன் விளைவாக பால் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். 

தங்களது வளர்ப்பு மாடுகளுக்கு ஏற்பட்ட ஒரு வகை தோல் நோய் கொப்புளங்கள், சிறு காயங்கள் காரணமாக மாடுகள் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாகவும் சில வேளை இறந்து விடுவதாகவும் தெரிவிக்கின்றனர். 

ஒரு நாளைக்கு அண்ணளவாக பத்து லீற்றருக்கும் அதிகமான பால் உற்பத்தியை மாடுகளில் இருந்து பெற்று வருகின்ற போதும் நோய் தாக்கத்தின் பின் பால் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், தங்களது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

இதன் நோய் தாக்கம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி பாற்பண்ணையாளர்களின் மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .