2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி

Kogilavani   / 2021 ஜனவரி 15 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ்

கிண்ணியா பொதுசுகாதார பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதன் காரணமாக, கிண்ணியா கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில், மாணவர்கள், ஆசிரியர்களின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, பாடசாலையின் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம், கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரி, அல் ஹிரா மகளிர் மகா வித்தியாலயம், ரீ.பி. ஜாயா மகா வித்தியாலயம், குட்டிக்கராச் இஹ்ஸானியா மகளிர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலேயே, மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த 13ஆம் திகதி, கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய ஆசிரியர் ஒருவர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டதையடுத்து, 2,084  மாணவர்களைக் கொண்ட இந்த பாடசாலையில் மாணவர்கள் எவருமே, இன்று (15) சமூகமளிக்கவில்லை.  

அதேவேளை 116 ஆசிரியர்களைக் கொண்ட இந்தப் பாடசாலையில், 25  ஆசிரியர்களே இன்று(15) வருகை தந்திருந்தனர் என்று பாடசாலையின் அதிபர் நாதிரா அமீன் வாரி  தெரிவித்தார். 

கிண்ணியா அல் ஹிரா மகளிர் மகா வித்தியாலயத்தில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரவு இன்றி வெறிச்சோடி காணப்பட்டதாக அதிபர் எம்.எஸ் நஸ்ருதீன் தெரிவித்தார். 
கடந்த நான்கு தினங்களாக இங்கு இதே நிலையே காணப்படுவதாகவும் தெரிவித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .