2021 மார்ச் 01, திங்கட்கிழமை

மூதூர் இறைச்சி கடைகளுக்கு எச்சரிக்கை

Princiya Dixci   / 2021 ஜனவரி 12 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எப்.முபாரக் 

மூதூர் பிரதேசத்தில் இறைச்சிக்கடை நடத்தும் வியாபாரிகள் பொதுச் சுகாதார முறைகளை கடைப்பிடித்து நடந்து கொள்ளவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி என்.எம்.எம்.கஸ்ஸாலியின் தலைமையில், மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸின் ஏற்பாட்டில், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற கூட்டத்தில் மேற்படி கூறப்பட்டுள்ளது. 

சுகாதாரம் பேணல், கழிவுகளை முறையாக அகற்றல், கொண்டு செல்லலில் தனிநபர் சுகாதாரம் பேணல், வேலையாட்கள், காசாளர், விநியோகிஸ்தர் மற்றும் நுகர்வோர் முறையான முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் நடைமுறைப்படுத்துமாறும் கூறப்பட்டுள்ளதுடன், இந்நிபந்தனைகளை செய்யத்தவறும் பட்சத்தில் அனுமதிகள் இரத்துச் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .