Princiya Dixci / 2021 ஜனவரி 12 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம். கீத்
திருகோணமலை நகர், ஏகாம்பரம் வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஊழியர்கள் 10 பேருக்கு, இம்மாதம் 7ஆம் திகதி எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள், இன்று (12) வெளியாகின.
இதில் குறித்த தனியார் வங்கி ஊழியர் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் இருவரும் திருகோணமலை நகர், மின்சார நிலைய வீதி, வடகரை வீதியில் வசித்து வருபவர்கள் எனவும் மேற்படி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இருவரையும் பொருத்தமான கொவிட் மத்திய நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கையில் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஈடுபட்டுள்ளது.
21 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
44 minute ago