2021 மார்ச் 06, சனிக்கிழமை

விவசாய போக்குவரத்துகளை சீர் செய்ய கோரிக்கை

Princiya Dixci   / 2021 ஜனவரி 21 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீட், ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா பிரதேச விவசாயிகள், தங்களுடைய விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு கொண்டு செல்லக்கூடிய வகையில், வீதிப் போக்குவரத்து வசதிகளை சீர் செய்து தர வேண்டுமென, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் திருகோணமலை மாவட்டச் செயலாளர் ஆகியோரிடம் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கோரிக்கை அடங்கிய கடிதத்தை, அவர் இன்று (21)  அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தீனேறி, கண்டக்காடு பெரியவெளி, சின்னவெளி, கிரான், குரங்கு பாஞ்சான், கல்லடிட்டுவான், மஜீத் நகர், வெள்ளம்குலம், சுங்கான் குழி, பட்டியானூறு போன்ற  பிரதேசங்களில் சுமார் 6,000க்கும் மேற்பட்ட  ஏக்கர்களில் செய்கை பண்ணப்பட்ட நெல்லை சந்தைப்படுத்தலுக்காக கொண்டு செல்ல முடியாத நிலையில் விவசாயிகள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

“மூதூரில் இருந்து கிண்ணியா நடுஊற்று ஊடாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட கிரவல் வீதி மற்றும் விவசாய உள் வீதிகள் அனைத்தும் மிகவும் சேதமடைந்துள்ளன. இவ்வீதிகள் ஊடாக தொடர்ச்சியாக மணல் ஏற்றும் கனரக வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் சென்று வருவதாலும் வீதிகள் தொடர்ந்தும் சேதமடைகின்றன.

“2008ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட மேறபடி இவ்வீதிகள் விவசாயிகளின் வயல்களின் ஊடாகவே அமைக்கப்பட்டது. அதற்கான நட்டஈடுகள் இதுவரை விவசாயிகளுக்கு  வழங்கப்படவில்லை. விவசாயிகள், பல முறைப்பாடுகளை செய்தும் பல போராட்டங்களை நடத்தியும் இதுவரை எவராலும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

“எனவே, மேற்படி கிரவல் வீதியையும் ஏனைய விவசாய உள் வீதிகளையும் மேற்பார்வை செய்து, விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்றவகையில் புனரமைப்புச் செய்து தர வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .