2021 மார்ச் 01, திங்கட்கிழமை

வைத்தியசாலை சிற்றூழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

Princiya Dixci   / 2021 ஜனவரி 21 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் தங்களுக்கென தற்காலிகமாக வழங்கப்பட்ட கொரோனா சீருடையை வழங்குமாறு கோரி, இன்று (21)  காலை 9 மணி தொடக்கம் 11.30 மணி வரை பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

கொரோனா பரவல் நிலைமையைக் கருத்தில்கொண்டு, தங்களுக்கு விசேட விடுமுறை வழங்க வேண்டும் எனவும் தற்காலிக கொரோனா சீருடைகளை மத்திய அரசாங்கம் வழங்கியும் வைத்தியசாலை நிர்வாகம் அவற்றைத் தமக்கு இதுவரை வழங்கவில்லையெனவும் உடனடியாக அதனை வழங்குமாறு கோரியும் இப்பகிஸ்கரிப்பு நடைபெற்றுள்ளது.

இந்தப் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில், வைத்தியசாலையில் கடமையிலிருந்த 150க்கும் மேற்பட்ட சிற்றூழியர்கள் ஈடுபட்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .