2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

வெசாக் போயா தினத்தில் வடிசாராயம் கொண்டு சென்றவர் கைது

Princiya Dixci   / 2016 மே 23 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை, சேருநுவரப் பிரதேசத்தில் வெசாக் போயா தினத்தில் வடிசாராயம் இரண்டு போத்தலைக் கொண்டு சென்ற நபரொருவரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) மாலை கைதுசெய்துள்ளதாக சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர். 

சேருநுவரப் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 
     
சந்தேகநபர், கல்லாறு பகுதியிலிருந்து சாராயத்தினை வாங்கிக்கொண்டு சென்ற போது கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சந்தேகநபரைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, மூதூர் நீதிவான் முன்னிலையில்  இன்று திங்கட்கிழமை (23) ஆஜர்படுத்தவுள்ளதாக சேருநுவரப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .