2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

நல்லிணக்க ஆணைக்குழுவின் குச்சவெளி அமர்வில் 146 பேர் சாட்சியம்

Kogilavani   / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் பிற்பகல் 02 மணியளவில் நிறைவுப்பெற்றுள்ளன.

இதன் போது 146 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 53  பேர் நேரடியாக ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளதுடன் ஏனையோர் எழுத்து மூலமாக சாட்சியமளித்ததாக ஆணைக்குழுவின்   தலைவர்  சி.ஆர்.டி சில்வா தெரிவித்தார்.

யுத்த நடவடிக்கைகளின் போது காணமால் போனவர்கள் குறித்தும் மீள்குடியேற்றத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்துமே இதன் போது அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதில் சாட்சியமளித்த தென்னமரவாடியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் தான் 1985 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்றதாகவும் தன்னுடைய 1500 ஏக்கர் நிலப்பரப்பு படையினர் வசமுள்ளதாக தெரிவித்ததுடன்,  அவ்விடத்தில் தன்னை மீள்குடியமர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--