2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை

தேசிய உற்பத்தி திறன் விருது கிழக்கு சுகாதார சேவை திணைக்களத்துக்கு

Super User   / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(எஸ்.எஸ்.குமார்)

2009ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கல் விழா  நேற்று புதன்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

தொழில் கூட்டுறவு உற்பத்தித் திறன் மேம்பாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் டி.எம்.ஜயரத்தன கலந்து கொண்டார்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கான விருதை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அதிகாரி எம்.தேவராஜன் தொழில் உற்பத்தி அமைச்சர் காமினி லொக்குஹேயிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

இதன் போது கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஈ.ஜி.ஞானுகணாளன்  பாராட்டுச் சான்றிதழை அமைச்சரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X