Menaka Mookandi / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா கல்வி வலயத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு வெள்ள நிவாரண முற்;கொடுப்பனவாக 7 ஆயிரம் ரூபா வீதம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசீம் தெரிவித்தார்.
கிண்ணியா கல்வி வலயத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்படாதோரும் இந்த நிவாரணத்தை பெறுவதற்கு விண்ணப்பித்திருப்பதாகவும் இதற்கென ஒதுக்கப்பட்ட நிதி போதாமையினாலும் இந்த நடவடிக்கையினை எடுப்பதற்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக உண்மையை நிலையை கண்டறிய விசேட குழு நியமிக்கப்பட்டிருந்தும் அக்குழு விண்ணப்பித்த சகலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கணவன் மனைவி பாதிக்கப்பட்டதாக விண்ணப்பித்திருந்தால் அதில் ஒருவருக்கு வழங்க பரிந்துரைப்பதால் இவ்வாறு இத்தொகையை பகிர்ந்தளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026