2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

சீரற்ற காலநிலையால் இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 24 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


மூதூர் சம்பூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து பட்டித்திடல், மணற்சேனை உள்ளிட்ட இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்கள் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

தாம் வசித்து வரும்  தற்காலிக தகரக் கொட்டில்களில் தரைப்பகுதியிலிருந்து நீர் கசிந்து வருவதனாலும் உக்கிய தகரங்களினூடாக ஒழுகுவதனாலும்  தூங்க முடியாது மரக்குத்திகளிலும் பலகைகளிலும் அமர்ந்திருந்தே காலத்தைக் கழிக்க வேண்டியள்ளதாக  இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

உலக உணவு திட்டத்தினால் வழங்கப்பட்டுவந்த உலர் உணவு நிவாரணம் கடந்த ஜனவரி மாதம் முதல்  நிறுத்தப்பட்டதன் மூலம் தாம் நாளாந்தம் உணவைத் தேடிக் கொள்வதில் பெரும் பிரச்சினையை எதிர் நோக்கி வருவதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் கூட தமக்கு வழங்கப்படுவதில்லையென்று கூறும் இம்மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது இக்கட்டான நிலைமையை கவனத்திற்கொண்டு உதவுவதற்கு முன்வரவேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .