2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

மூதூர் பிரதேசசபை உறுப்பினர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

மூதூரிலுள்ள  நிதிக் கம்பனியொன்றின்  ஊழியர் ஒருவரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில்   மூதூர் பிரதேசசபை உறுப்பினர் புகாரி நசார் என்பவரை வியாழக்கிழமை (03) கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் மூதூர் பிரதேச சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் ஆவார்.

கொள்வனவு  செய்த வாகனத்திற்குரிய  தவணைக்கட்டணத்தை  இப்பிரதேசசபை உறுப்பினர் பல நாட்களாக  செலுத்தாதிருந்துள்ளார். இந்நிலையில்,   நிதிக் கம்பனி  குறித்த வாகனத்தை தனது அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றுள்ளது.

இதனால், கோபமடைந்த பிரதேசசபை உறுப்பினர் நிதிக் கம்பனி அலுவலகத்திற்குச் சென்று வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன்,  ஊழியர் ஒருவரையும் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான ஊழியர் சிகிச்;சைக்காக  மூதூர் வைத்தியசாலையில்   அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை  மூதூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .