Editorial / 2017 ஜூலை 27 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் காலி கடற்கடையின் அழகை, இந்திய கிரிக்கெட் அணியின் விராத் கோலி, தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்துள்ளார்.
காலி கடற்கரையில் இருந்து, தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “இவ்வாறான சூழலில் நான் தினமும் நித்திரையிலிருந்து எழக் கிடைத்தால்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காலி நகரம் தொடர்பில் கோலி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு, சர்வதேச கிரிக்கெட் இரசிகர்களுக்கு மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது.
கோலியின் குறித்த டுவிட்டர் பதிவால், இலங்கை சுற்றுலாத் துறைக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இலங்கை வந்துள்ளது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி விளையாடி வருகிறது.
14 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
40 minute ago