Editorial / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம் தொடர்புகொண்டு, முச்சக்கர வண்டியொன்றில் தவறான நடத்தையில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் இருவரை, நேற்று (13) கைது செய்ததாக, நிக்கவெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
நிகவெரட்டிய பகுதியில், மறைவான இடத்தில் முச்சக்கர வண்டியில் இவர்கள் இருப்பதாக, பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே, கைது செய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரத்திலுள்ள பிரபல பாடசாலையைச் சேர்ந்த 17 வயது மாணவரும் நிக்கவெரட்டிய பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவியுமே, இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்கள், மூன்று வாரகாலமாக பேஸ்புக் மூலம் தொடர்புகொண்டுள்ளதாகவும் மாணவியின் அழைப்பின் பேரில் நண்பர் ஒருவருடன் குறித்த மாணவர் வருகை தந்துள்ளதாகவும், ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பில், மாணவனுக்கு உதவிய குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டியின் சாரதியொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 hours ago
26 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
26 Dec 2025