Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 21, புதன்கிழமை
Editorial / 2017 ஜூலை 05 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகன் ஒருவர், தனது 83 வயதுடைய தாயை பொல் ஒன்றினால் தாக்கிக் கொலைசெய்துவிட்டுத் தப்பியோடிய சம்பவமொன்று, தென் மாகாணம், மொரவக கொடிகாரகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
நேற்று இரவு, சந்தேகநபரான மகன் மதுபோதையில் வீட்டுக்கு வந்து அவரின் தாயைத் தாக்கியுள்ளார். இதன்போது, சந்தேகநபரின் மூன்று பிள்ளைகளும் அவரைத் தடுத்துள்ளனர். எனினும், அது பயனற்றமையினால் மகனால் தாக்கப்பட்ட தாய் பரிதாபமாகப் பலியாகியுள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் மனைவி, சுமார் 10 மாதங்களுக்கு முன்னர் அவரையும் பிள்ளைகளையும் கைவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்நிலையில், பிள்ளைகளுடன் தனது தாயாருடன் வசித்து வந்த சந்தேகநபர், தினந்தோறும் குடித்து விட்டு வந்து அவர்கள் வசிக்கும் வீட்டை தனது பெயருக்கு மாற்றி எழுதுமாறு கூறி, அவரின் தாயை அச்சுறுத்தித் தாக்குவதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ தினத்திலும் சந்தேகநபர், அவரின் தாயை தாக்கியுள்ள நிலையில், அவரது பிள்ளைகள் மூவரும் சேர்ந்து தந்தையை அறையொன்றில் தள்ளி அடைத்துள்ளனர்.
எனினும் , கோடரியொன்றால் கதவை உடைத்து வெளியே வந்துள்ள சந்தேகநபர், தொடர்ந்து அவரின் தாயை மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளார்.
பிள்ளைகள், அயலவர்களின் உதவியைக் கோரியுள்ள போதும், வழமையாக இது இடம்பெறுவதால் அயலவர்கள் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தனது பாட்டியை விடியும் வரை தனது தந்தை தாக்கியதாக அவரின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 11.30 மணி வரை குறித்த வயோதிபத் தாய் தொடர்பில் தகவல் இல்லாததால், அயலவர்கள் தேடியதில் அவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் மூத்த மகன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2021
20 Apr 2021
20 Apr 2021
20 Apr 2021