Janu / 2026 மார்ச் 18 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம் பரந்தளவிலான விவசாய நிலங்களை கொண்ட நெல்லுற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டமாக திகழ்வதால், தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா புதன்கிழமை (18) அன்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அம்பாறை மாவட்டம் நெல், காய்கறி உள்ளிட்ட பல்வேறு பயிர்ச்செய்கைகளில் முக்கிய பங்காற்றும் ஒரு விவசாய மையமாகும். ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக முழுமையாக விவசாயத்தையே சார்ந்துள்ளனர். இவ்வாறான நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள வாராந்த 75 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு, விவசாயப் பணிகளை சீராக முன்னெடுக்க முடியாத நிலையை தோற்றுவித்துள்ளது.
ஒரு ஏக்கர் நிலத்தில் உழவு, விதைப்பு மற்றும் நீர்ப்பாசனம் உள்ளிட்ட அடிப்படை விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள குறைந்தபட்சம் 20 லீற்றர் எரிபொருள் அவசியமாகும். பெரும்பாலான விவசாயிகள் பல ஏக்கர் நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதால், அவர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவு மிக குறைவாக உள்ளது. இதன் காரணமாக உழவு நடவடிக்கைகள் தாமதமடைவதுடன், உற்பத்தி குறையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, உழவு இயந்திரங்களுக்கு வாரத்திற்கு குறைந்தபட்சம் 300 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம். இது விவசாயப் பணிகளை தடையின்றி மேற்கொள்ளவும், பயிர்ச்செய்கையின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் உதவும்.
மேலும், தற்போதைய நடைமுறையின்படி உழவு இயந்திரங்களைக் கலப்பையுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. இது வீதி விபத்துகளை அதிகரிப்பதுடன், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக கிராமப்புற குறுகிய வீதிகளில் இத்தகைய பாரிய வாகனங்களை இயக்குவது பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, விவசாயிகளுக்கு கலன்களில் (Containers) எரிபொருள் வழங்கும் நடைமுறையை அவசரமாக அறிமுகப்படுத்த வேண்டும். அத்துடன் அதற்கான முறையான கண்காணிப்பு மற்றும் விநியோக கட்டமைப்பொன்றையும் உருவாக்க வேண்டும்.
தற்போது முக்கியமான பயிர்ச்செய்கை பருவம் ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்நிலை தொடர்ந்தால் நாட்டின் உணவு உற்பத்தி பாதிக்கப்படும். ஆகவே, ஜனாதிபதி, பிரதமர், விவசாய அமைச்சர் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆகியோர் இவ்விடயத்தில் நேரடியாக தலையிட்டு, விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டார்.
நூருல் ஹுதா உமர்
29 minute ago
44 minute ago
48 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
44 minute ago
48 minute ago
49 minute ago