S.Renuka / 2026 மார்ச் 18 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், வரும் தேர்தலில் புதிதாக களம் காணும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பல்வேறு வகையில் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

குறிப்பாக விஜய்யிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று அவரது மனைவி சங்கீதா விஜய், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. விவாகரத்து கோரிய சங்கீதா விஜய், அவரது கணவர் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார். குறிப்பாக ஒரு நடிகையுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரையும் வெளியிடுவேன் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க, அந்த நேரத்தில் விஜய்யின் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் விஜய்க்கு ஆதரவாகவும் சங்கீதா விஜய்க்கு எதிராகவும் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வந்தனர். ஆபாச முறையில் திட்டியும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதன் சூடு தணிவதற்குள்ளேயே, தயாராப்பாளரின் திருமண விழா ஒன்றில் தவெக தலைவர் விஜய்யும், நடிகை திரிஷாவும் ஒன்றாக ஒரே காரில் ஒரே நிற உடையில் பங்கேற்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவ, அதுவரை விஜய்க்கு ஆதரவாக பேசி வந்தவர்களே, இதற்கு மேல் 'முட்டு கொடுக்க முடியலண்ணா' என்று வருத்தத்துடன் பதிவிட்டு வந்தனர்.

அப்படியானால், சங்கீதா-விஜய் தெரிவித்த அந்த நடிகை, திரிஷா தானா என்று பலரும் முடிவு செய்து விட்டனர். இதற்கு முன்பாகவே விஜய், திரிஷாவை விட்டு வெளியே வர வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகந்திரன் பேசியதற்கு பல கண்டனங்கள் எழுந்தன. அதற்கு திரிஷாவும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதோடு முடிந்ததா என்று கேட்டால், அதுதான் இல்லை.
விழா மேடை ஒன்றில் திரிஷா குறித்து நடிகர் பார்த்திபனிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, 'குந்தவை வீட்டுக்குள்ளேயே குத்த வைத்தால் நல்லது' என்று அவர் பங்குக்கு விமர்சித்து இருந்தார். இதற்கும் திரிஷா கண்டனம் தெரிவித்து இருந்தார். ஆனால் அதற்கு வருத்தம் தெரிவித்த பார்த்திபன், தனது பாணியில் மீண்டும் திரிஷாவை, ஓன் டூ த்ரி-ஷாக்கு என்றும் 3-ஆவது (த்ரி) நபர் என்றும் பேசி வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

சமீபத்தில் மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்குள் திரிஷா சென்ற போது, செய்தியாளர்கள் அவரிடம் விஜய் குறித்து கேள்வி எழுப்பினர். அதனை பொருட்படுத்தாமல் அங்கிருந்து சென்று விட்டார். மீண்டும் சென்னை திரும்பிய போதும் திரிஷாவை செய்தியாளர்கள் சூழ்ந்தனர். அப்போதும் எந்த பதிலும் கூறாமல், காரில் ஏறிச் சென்று விட்டார். அப்போது தான் திரிஷாவின் காரை கவனித்த நெட்டிசன்கள், விஜய் காருடன் ஒப்பிட்டு, 2 கார்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் என முழு தகவலையும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

அதாவது விஜய் பயன்படுத்தும் காரும், த்ரிஷா பயன்படுத்தும் காரும் ஒரே கம்பெனியைச் சேர்ந்தது தான். அது மட்டுமில்லை, விஜய் இந்த காரை வாங்கியது 2023ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி. அதே கம்பெனி அதே மாடலைச் சேர்ந்த காரை திரிஷா வாங்கியது 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி. 3 வார இடைவெளிக்குள்ளேயே.. இரு கார்களுக்கும் ஒரே நிறுவனத்தில் இன்சூரன்ஸும் போடப்பட்டு உள்ளது. இப்படி விஜய், திரிஷாவை சுற்றி நிலவும் சர்ச்சைகளை நெட்டிசன்கள் அவ்வப்போது புட்டு புட்டு வைத்து வருகின்றனர்.
9 minute ago
22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
2 hours ago