Editorial / 2017 நவம்பர் 06 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் மாவட்டம், நாரம்மல பகுதியில் புதையல் தோண்டிய இருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். நாரம்மல மற்றும் பன்னல பகுதிகளைச் சேர்ந்த 38, 52 வயதுகளுடைய இருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து, புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்களும், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மீவெவ பகுதியில் புதையல் இருப்பதாக, சந்தேகநபர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் நள்ளிரவு வேளையில் பூஜைகளை ஆரம்பித்ததன் பின்னர், புதையல் தோண்டும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .