Editorial / 2019 ஜூலை 16 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெல்லவாய, ஹதபானாகல பிரதேசத்தில் தனியார் இடமொன்றில் காணப்பட்ட கல் குவாரிக்கு அருகில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தொல்பொருள் பாதுகாப்பு விசேட பொலிஸ் பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள் நேற்று (14) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
22 முதல் 40 வயதுடைய கொழும்பு, தங்காலை, கண்டி மற்றும் வெல்லவாய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .