2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் பலி

Editorial   / 2017 ஜூன் 28 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, கொடுகொட பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரொருவர், காலி - மாத்தறைக்கு இடையிலான பகுதியில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளாரென, காலி துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயிலில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.45க்கு மோதிய குறித்த நபரை, படுகாயமடைந்த நிலையில், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளாரென, காலி துறைமுக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில், காலி துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .