Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓட்டோ ஒட்டுவதற்கான வயதெல்லை 35 என வரையறுக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டால், இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என, அரசாங்கத் தகவல்கள் தெரிவித்தன.
நேற்றைய (21) அமைச்சரவைக் கூட்டத்திலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓட்டோ ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதெல்லை 35 என மட்டுப்படுத்தப்பட்டுள்ளதென, போக்குவரத்து அமைச்சரால் வர்த்தமானி மூலமாக வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் தொடர்பாக, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர, இவ்வாறான ஒழுங்குவிதிகள், தனிநபர் ஒருவரின் தொழில் உரிமையைப் பாதிக்கிறது எனக் குறிப்பிட்டார்.
குறிப்பாக இளைஞர்கள், தங்களுக்கு விருப்பமான தொழிலைத் தெரிவுசெய்வதற்கு, இவ்வாறான விதிகள் தடையாக அமைகின்றன எனவும் குறிப்பிட்டார்.
இவ்வாறான ஒழுங்குவிதிகளை ஏற்படுத்துவதற்கு முன்பாக, ஓட்டோக்களின் இறக்குமதி அளவைக் குறைப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அமைச்சர்கள் பலர் கருத்துத் தெரிவித்தனர்.
இந்த எதிர்ப்பையடுத்தே, மேற்படி வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளதெனத் தெரியவருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago