Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2019 நவம்பர் 16 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில், அரசியல் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு தமது வாக்குகளை அளித்துள்ளனர் .
திருகோணமலை புனித மரியாள் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வாக்களித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்தரன், வடமராட்சியிலும் , மாவை சேனாதிராச, தெல்லிப்பழையிலும், சி.சிறிதரன், கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனர் ஆரம்ப வித்தியாலயத்திலும் இன்று (16) காலை தமது வாக்குகளைப் பதிவுசெய்துள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ஆனந்தசங்கரி, கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் தனது வாக்கைச் செலுத்தினார்.
மன்னார் தாராபுரம் வாக்களிப்பு நிலையத்தில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் காலை 10.45 மணியளவில் வாக்களித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகா வித்தியாலயத்தில் வாக்களித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இரம்பொடை தவலந்தென தமிழ் மகா வித்தியாலய்தில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதியகிராமங்கள் தோட்ட
உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்,
தலவாகலை மடக்குபுர தமிழ் வித்தியாலயத்தில் பதிவு செய்தார்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வண்ணியாராச்சி, பெல்மதுளை ரில்லேன ஸ்ரீ அபேவர்தனாராம விகாரையில் வாக்களித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் தனது வாக்கைப் பதிவுசெய்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், மன்னார் தாராபுரம் அல் மினா மகா வித்தியாலய வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
திருகோணமலை மாவட்ட பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஃறுப், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஃறுப் ஆகியோர் கிண்ணியாவில் வாக்களித்தனர்.
மட்டக்களப்பு - கல்குடா தேர்தல் தொகுதியில், ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியும், வாழைச்சேனை விநாயகபுரம் வாணி வித்தியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரனும், கிரான் மத்திய மகா வித்தியாலயத்தில் முன்னாள் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரனும் தங்களது வாக்களை அளித்திருந்தனர்.
யாழ்பபாணம் உட்பட வட பகுதிகளில் அரசியல் தலைவர்கள் வாக்களித்துள்ளனர்.
(அப்துல்சலாம் யாசீம், அ.அச்சுதன், நிதர்ஷன் வினோத், எஸ்.என் நிபோஜன், எஸ்.றொசேரியன் லெம்பேட், வி.சுகிர்தகுமார், எஸ்.எம்.அறூஸ், ஏ.ஆர்.எம்.றிபாஸ், எம்.எம்.அஹமட் அனாம், எஸ்.சதீஸ், சிவாணி ஸ்ரீ)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .