2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

இறந்த பின்னும் போராட்டம்....

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை - மலங்குமுவ, கல்பொத்தாவல கிராம மக்கள், தமது போக்குவரத்துக்கு முறையான பாதை வசதியின்றி, பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இறந்த ஒருவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான இறுதி ஊர்வலத்தைக் கூட, மிகுந்த பிரயத்தனத்தின் மத்தியிலே நடத்த வேண்டியுள்ளதாக, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

பதுளை நகரிலிருந்து 4 கிலோமீற்றர் தொலைவிலும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திலிருந்து 2 கிலோமீற்றர் தொலைவிலும், மேற்படி கிராமம் அமைந்துள்ளது.

இந்தக் கிராமத்தில், 35 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், கிராம மக்களுக்கு என்று, உரிய பாதை ஒன்று இதுவரை அமைத்துக் கொடுக்கப்படவில்லை என்பதால், மிகவும் ஆபத்து நிறைந்த குறுக்குவழி பாதைகளையே மக்கள், தமது போக்குவரத்துக்காக அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நோயாளர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல வேண்டுமெனில், கற்களிலான பாரியப் படிகட்டுகளைத் தாண்டியே பிரதான வீதிக்கு வர வேண்டியுள்ளதாகவும் இதனால், பல உயிர்கள், அநியாயமாகக் காவுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒருவருக்கான இறுதி ஊர்வலத்தைக் கூட மிகுந்தப் பிரயத்தனத்தின் மத்தியிலே, நடத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கும் காலத்தில், பலர், பாதையை அமைத்துத் தருவதாக, வாக்குறுதி அளிவித்து விட்டுச் செல்வதாகவும் ஆனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே பாரிய உயிராபத்துகள் இடம்பெறுவதற்கு முன்பாக, பாதுகாப்பான, உரிய பாதை ஒன்றை அமைத்துத் தருமாறு, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X