2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

கொம்பனித்தெருவில் அகற்றப்படும் சட்டவிரோத கட்டிடங்கள்

Super User   / 2010 மே 08 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}
கொம்பனித்தெரு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த  கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதை படத்தில் காணலாம். இவ்வாறு  சட்டவிரோதமான   கட்டிடங்கள் அகற்றப்படுவதால் அங்கு பதற்றமான நிலை காணப்படுகின்றது. அதிகமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(R.A)  Comments - 0

 • jaya Saturday, 08 May 2010 11:05 PM

  யார் இடம் கொடுத்து உடைத்து இருக்கலாம்?

  Reply : 0       0

  xlntgson Sunday, 09 May 2010 08:09 PM

  அரசு மிகவும் துரித கதியில் செயல்படுகிறதோ? பெறுமதியான இடத்தை எடுத்துக்கொண்டு பெறுமதி குறைவான இடத்தை தருகின்றார்கள் என்று குறைப்படாத அளவுக்கு நீதிமன்ற விசாரணையும் முறையீடும் மேல்முறையீடும் அனுமதிக்கப்பட வேண்டும்.சட்ட தாமதத்தை அரசே பயன்படுத்துமென்றால் சாதாரண ஜனம் எப்படி? விசேட கோர்ட் ஏற்படுத்தினாலும் நல்லது. உறுதியுடைய காணிகள் என்கிறார்கள்; அரசு இல்லை என்கிறது, யாரை நம்புவது இந்தகாலத்தில் கொழும்பு இரண்டில் காணி உரித்துடையவர்களை கொழும்பு பதினைந்துக்கு போகச்சொன்னால் இவற்றுக்குப்பெயர் உறுதியா தற்காலிகமா?

  Reply : 0       0

  nuah Monday, 10 May 2010 09:28 PM

  கொழும்பு 15 அல்ல, பாலத்துறை 14. இவர்கள் அதற்கு ஒத்துக்கொண்டார்களாம் நஷ்டஈடும் பெற்றிருக்கிறார்களாம் என்பதுதான் கேள்வி, அரசுடன் இணைந்து கொண்டவர்கள் ஒருவரும் இதை கண்டுகொள்வதாக தெரியவில்லை. ஒருவேளை இவர்களுடைய அறியாமையினால் கொழும்பில் எங்காவது இடம் தந்தால் போதும் என்று ஒத்துக்கொண்டு இப்போது தடுமாறுகின்றார்களோ? வழக்கின்றி முடிப்பதிலும் அபாயம் இருக்கின்றது, இது ஒரு பதப்பருக்கை தான், இனி உடைக்கவிருப்பதையும் விருப்பத்தின் அடிப்படையில் செய்வார்களா, அங்கும் பலாத்காரம் தான் பிரயோகிக்கப்படுமா?

  Reply : 0       0

  srikant Monday, 10 May 2010 09:37 PM

  இவ்விடயத்தில் தனியாரும் கூட பொலீஸ் துணையுடன் அநேகமான இடங்களில் சிறிய தொகைகளை கொடுத்து ஏழைகள் வாழும் தோட்டங்களை காலி செய்து பிளட்(apartment) அடித்திருக்கிறார்கள். இடம் கேட்டிருக்கலாமே என்று பின்னர் வருத்தப்படுகின்றனர். வழக்கு போட்டாலும் இலேசில் முடிவடையாது. விசேட கோர்ட் ஏற்படுத்துவது நல்லது என்றே நானும் நினைக்கிறேன். சிலர் பணம் கேட்கலாம் சிலர் இடம் கேட்கலாம் சிலர் சிறிது பணமும் சின்ன இடமும் கேட்கலாம். எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன பலாத்காரத்தை கையாளாமல் இருக்க, நாகரிகம் அங்கேதான் இருக்கிறது.

  Reply : 0       0

  sheen Monday, 10 May 2010 09:42 PM

  பாலத்துறையும் இவர்களுக்கு நிரந்தரம் இல்லை, அங்கு போனதும் இவர்கள் மறக்கப்பட்டுவிடக் காரணம் இல்லாமல் இல்லை. ஏனென்றால் இவர்கள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடன் அடையாளம் காட்டப்பட்டுவிட்டார்கள். வழக்குகளை இழுக்காமல் முடிவிக்க அந்த அரசியல்வாதி வழக்கறிஞர்கள் இவர்களுக்கு சட்டஉதவி அளிப்பார்களா? பொறுத்து இருந்து பார்ப்போம்!

  Reply : 0       0

  sisra Monday, 10 May 2010 09:48 PM

  சட்ட உதவி பெரும் பிரச்சினை அல்ல. கோர்ட் கூட அதை உத்தரவிடலாம். அதுவரை பலகை வீடுகளில் போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாதவிடத்தில் எப்படி வாழ்வார்கள் என்பதே, இவர்கள் இவ்விடத்துக்கு போக உடன்பட்டார்கள் என்பது உண்மையா என்றும் பார்க்க வேண்டும். பாதுகாப்பு தேவைக்கு என்று இடங்களை அப்புறப்படுத்த சட்டத்தில் எளிதாக இடம் அளிக்கப்பட்டிருக்கிறதா? புலிப்பிரச்சினைதான் இல்லையே, இப்போது!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--