2021 மே 10, திங்கட்கிழமை

சாதனையாளர்கள்...

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கடந்த புதன்கிழமையன்று வெளியாகின. அதில், சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களில் சிலர்... 

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவி பத்மசுதன் தக்ஷினியா 193 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார் என அதிபர் திருமதி இ.கணகசிங்கம் தெரிவித்தார். (படப்பிடிப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன்) 

கல்குடா கல்வி வலயத்திலுள்ள சந்திரகாந்தன் வித்தியால மாணவன் ஜெகதீசன் கர்ஜிதன் 190 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளார். (படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு மாணவர்கள், இம்முறை மூன்றாம் இடத்தினைப் பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு வலயத்திலுள்ள மெதடிஸ்த மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவன் முகம்மட் ஜவாஹிர் அகமட் முஷார்ப்- 189, மண்முனை மேற்கு கல்வி வலயத்திலுள்ள வவுணதீவு கரடிவெட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த சுதாகர் அஸ்வினி- 189 புள்ளிகளையும்; பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளனர். 

கரவெட்டி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் மேலும் 5 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

யாழ். சென்.ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவன் நோதிநாதன் வசீகரன்-192 புள்ளிகளைப் பெற்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்) 

திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி தனுக்ஷனா சிவா- 184 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். (படப்பிடிப்பு: ஏ.எஸ்.எம்.யாசீம்)

தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்களான எஸ்.ஏ.சம்ஹான் மற்றும் எச்.எம்.எம்.சம்ஹான் ஆகிய இருவரும் 170 புள்ளிகளையும் எஸ்.ஏ.அன்சீப் 165 புள்ளியையும் பெற்றுள்ளனர் என அதிபர் ஏ.பீ.ஏ.ஜப்பார் தெரிவித்தார். (படப்பிடிப்பு: நஹீம் முஹம்மட் புஹாரி)

ஆலையடிவேம்பு கோட்டத்துக்குட்பட்ட விவேகானந்தா பாடசாலை மாணவி கமலேந்திரன் சிவர்;சிகா -180 புள்ளிகளைப் பெற்று வலய மட்டத்தில் முதலாமிடத்தையும் மாவட்ட மட்டத்தில் 11ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். (படப்பிடிப்பு: வி.சுகிர்தகுமார்)

கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாண்டிருப்பு அல்-மினன் வித்தியாலயத்தில், ஆர்.அத்தீப் அஹமட் -167, எல்.ஹிமாத் அஹமட் செயினுதீன்-164, ஏ.முஹம்மட் ஆக்கிப்- 163, எம்.என்.பாத்திமா அப்னா-161, எம்.எப்.முஹம்மட் ஆணிஸ் மற்றும் ஏ.ஆர்.பாத்திமா தூபா ஆகியோர்- 160 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர் என்று அதிபர் எம்.ஜே.அப்துல் ஹசீப் தெரிவித்தார். (படப்பிடிப்பு: பி.எம்.எம்.ஏ.காதர்)

முல்லைத்தீவு வலயக்கல்வி வலயத்;துக்குட்பட்ட தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், நஸார் நஸ்மன் அஹ்மத்-173, ஜவாத் ஜெஸ்லான்- 171, அப்துல் லதீப் முஹம்மது லுத்பி-160 புள்ளிகளையும் பெற்று சித்தி பெற்றுள்ளனர் என்று அதிபர் ஏ.சி.ரியாஸ் தெரிவித்தார். (படப்பிடிப்பு: ரஸீன் ரஸ்மின்)

கண்டி, வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள மடவளை அல்-முனவரா கனிஷ்ட வித்தியாலயத்தில் 17 மாணவர்கள், இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர் என்று அதிபர் ஜே.பௌசுர் றஹ்மான் தெரிவித்தார். (படப்பிடிப்பு: மொஹொமட் ஆஸிக்)

காரைதீவு க/மு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில், ஜெயசிறில் பேருஷ்ஜன்-172, ரஜீவன் சரஸ்திகன்- 153 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர். இந்த பாடசாலையிலர் ஐந்து வருடங்களின் பின்னர் இருவர்; சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (படம்: நடராஜன் ஹரன்) 

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின்  மாணவி அனிதா பாஸ்கர்- 180 புள்ளிகளைப் பெற்று  நுவரெலியா மாவட்டத்தில்  11ஆம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார். (படப்பிடிப்பு: எஸ். சுஜிதா)

கல்முனை கல்வி வலயத்திலுள்ள மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவன் ஹூமைதுஸ் ஸமீர் முகம்மது முறைஸ் 159 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். (படம்: பி.எம்.எம்.ஏ.காதர்)

நாவலப்பிட்டி இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.வினோஜா ஷிரோனி-157 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளார். 

கல்முனை கல்வி வலயத்தில் கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி மாணவன் மதுரா கிருஸ்ண சைதன்னியன்-189 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவன் எம்ஆர்.முகம்மட் மரீஸ-186 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் காரைதீவு ஆர்.கே.எம்.பெண்கள் பாடசாலை மாணவி ரமேஸ் குமார் கஜினி-185 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார். (படம்: பி.எம்.எம்.ஏ.காதர்) 

காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள் சித்திபெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். 

இப்பரீட்சையில், காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் தமிழ்ப் பிரிவில் இரத்தினபுரி மாவட்டத்தில் முதலாம், மூன்றாம், நான்காம் இடங்களை பெற்றுள்ளனர். (படம்: சிவாணி ஸ்ரீ)

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X