2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன், வா.கிருஸ்ணா

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளின் ஊர்வலம் மட்டக்களப்பில் இன்று (19) நடைபெற்றது.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்திலிருந்து  ஆரம்பமாகிய ஊர்வலமானது பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானம்வரை சென்றது.

மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் ஒதுக்கப்படக்கூடாது, அவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் போன்ற விடயங்கள் இதன்போது வலியுறுத்தப்பட்டன.

கிழக்கு மாகாண சமூகசேவைத் திணைக்களம் மாற்றுத்திறனாளிகளின் ஒன்றியம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, மண்முனை வடக்குப் பிரதேச செயலக முன்றலில் விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் 03ஆம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X