2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

இந்தியத் தலைவர்களுடன் ஒபாமா

Super User   / 2010 நவம்பர் 08 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்று இந்திய அரசாங்கத்தின் உயர் மட்டத் தலைவர்களை சந்தித்தார்.

இன்று காலை ராஷ்டிரபவனில் நடைபெற்ற வைபவமொன்றில் பங்குபற்றிய ஒபாமா பின்னர் ஹைதரபாத் இல்லத்தில் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியையும் அவர் சந்தித்தார்.

இன்று மாலை இந்திய நாடாளுமன்றத்தில் பராக் ஒபாமா உரையாற்றினார். நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில் ஒபாமா உரையாற்றும்போது அம்மண்டபம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிறைந்திருந்தது.

இரவில் ஒபாமா தம்பதியருக்கு ராஷ்டிரபவதி பவனில் விருந்தளிக்கப்பட்டது. இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். (படங்கள் : ஏ.எவ்.பி.)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--