Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 09 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

வலி வடக்கு, உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி நேற்று காலை நடைபெற்றது.
ஆலயத்தின் நூற்று அறுபதாவது ஆண்டாக இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. உயர் பாதுகாப்பு வலயத்தில் மக்கள் குடியேற அனுமதிக்கப்படாத வலிதூண்டல் பகுதியில் இந்த தேவாலயம் அமைந்துள்ள நிலையில், படைத்தரப்பினரின் அனுமதி பெறப்பட்டு நேற்று திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
திருப்பலியை அருட்தந்தை அருள்நேசன் அடிகளார் நிறைவேற்றினார். இவருடன் பங்குத்தந்தை ஞானேந்திரன், அருட்தந்தைகளான அன்ரனிதாஸ், ஜோர்ஜ், ஜெயசீலன், சதீஸ் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். (படங்கள் :- நவம்)




30 minute ago
36 minute ago
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
36 minute ago
54 minute ago
2 hours ago