Super User / 2010 ஒக்டோபர் 30 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
2010 ஆம் ஆண்டின் உலக அழகு ராணியாக (மிஸ் வேர்ல்ட்) அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயதான அலெக்ஸாண்ட்ரியா மில்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சீனாவின் சான்யா நகரில் சற்றுமுன் முடிவுற்ற 'மிஸ் வேர்ல்ட் 2010 ' போட்டியில் 115 பேர் பங்குபற்றினர். இதில் அலெக்ஸாண்ட்ரியா மில்ஸ் அழகுராணியாக தெரிவானார்.
கடந்த வருடம் உலக அழகுராணியாகத் தெரிவான ஜிப்ரால்டரை சேர்ந்த கெயான் அல்டோரினோ, மில்ஸுக்கு கிரீடத்தை அணிவித்தார்.
60 ஆவது வருடமாக மிஸ்வேர்ல்ட் போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் பொட்ஸ்வானாவைச் சேர்ந்த எம்மா வாரயெஸ் இரண்டாமிடத்தையும் வெனிசூலாவைச் சேர்ந்த அட்ரியானா வஸினி மூன்றாமிடத்தையும் பெற்றனர். (AFP)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
8 minute ago
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
23 Jan 2026