2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

எக்னெலிகொட காணாமல் போய் 200 நாள்; கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மெலனி பமுனுசிங்க)

லங்கா நியூஸ் இணையத்தள ஊடகவியாலாளர் பிரகீத் எக்னலிகொட காணமல் போய் 200 நாட்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி வியாழக்கிழமை நிறைவடைகின்றது. இதனை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மாலை கொழும்பு மாநகர சபைக்கு முன்னால் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காணமல் போன பிரகீத் தொடர்பில் அரசு மெளனமாக இருப்பதையும் பொலிஸார் ஒழுங்கான முறையில் விசாரணைகள் மேற்கொள்வில்லை என்பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.

இதில் சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை தழிழ் ஊடகவியாலாளர் ஒன்றியம்,  மற்றும் தெற்காசிய சுதந்திர ஊடக இயக்கம், மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மங்கள சமரவீர, தயாசிரி விஜேசேகர, சுரேஷ் பிரேமசந்திரன், சுனில் ஹந்துன்நெட்டி ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அனோமா பொன்சேகாவும் இதில் கலந்து கொண்டார்.

இதன் பின்னர் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய சுதந்திர ஊடக அமைப்பின் செயலாளர் சீதா ரணசிங்க, "பிரகீத் தவிர்ந்த அனைத்து விடயங்களிலும் பொலிஸார் விரைவாக விசாரணைகளை ஆரம்பித்தனர்" என்றார்.

'பேச்சு சுதந்திரம் இலங்கையில் இல்லை என்பதையே சியத  செய்தி பிரிவு தாக்கப்பட்டமை காட்டுவதாக உள்ளது' என ஊடகவியலாளர் ஞானசிறி கொத்திகொட தெரிவித்தார்.

'சட்டத்தின் முன் அனைவரும் சமனானவர்களே என நீதிமன்றம் தெரிவிக்கின்றது. எனினும் மேர்வின் சில்வா சமுர்த்தி உத்தியோகத்தரை மரத்தில் கட்டியது தொடர்பில் இதுவரை அவர் பொலிஸில்  முறைப்பாடு செய்யவில்லை' எனவும் ஞானசிறி கொத்திகொட  தெரிவித்தார்.

இதில் லங்கா இரிதா பத்திரிகை ஆசிரியர் சந்தன சிறிமல்வர்தனவும் உரையாற்றினார்.

 
(படப்பிடிப்பு :- பிரதீப் பத்திரன)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .