Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
A.P.Mathan / 2010 ஜூலை 10 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியாவிற்கு முதல் தடவையாக உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட பிரதமர் டி.எம்.ஜெயரட்ணவிற்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை ஞாயிறு வரை வவுனியாவில் தங்கியிருந்து பல நிகழ்வுகளில் பிரதமர் கலந்து கொள்வார் என மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்தார்.
வவுனியா -கண்டி வீதியில் அமைந்துள்ள போதி தக்சினா ராமய விகாரைக்கு சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டமை அவரது வவுனியா விஜயத்தின் முதல் நிகழ்வாக அமைந்திருந்தது. பின்னர் நகர சபை மண்டபத்தில் பௌத்த சமய தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில், வவுனியாவில் உள்ள 20 பௌத்த விகாரைகளுடைய புனர்நிர்மாண வேலைத்திட்டங்களுக்கு உரிய காசோலைகளையும் வழங்கினார்.
அதன்பின்னர் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்தபோது அரச அதிபர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார். தமிழ் கலாசாரமுறைப்படி வரவேற்பு இடம்பெற்றமை விசேட அம்சமாகும். செயலகத்தில் நடைபெற்ற திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்ட உயர்மட்ட கூட்டத்திலும் பிரதமர் கலந்து கொண்டிருந்தார். நகர சபைத் தலைவர் ஜி.நாதன், அமைச்சர் றிஷாட் பதியூதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக், சிறிலங்கா சுதந்திரகட்சி அமைப்பாளர் சுமதிபால, வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.சிவசாமி உள்ளிட பலர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.
வவுனியா மாவட்ட செயலகவளவில் உள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தியமை முக்கிய அம்சமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
03 Jul 2025