Super User / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

(மெலனி பமுனுசிங்க)
"நான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்ட பின்னர் மீண்டும் பதவிக்கு வருவேன்" என முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
களனியில் தனது ஆதரவாளர்களை இன்று சந்தித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவரை மேர்வின் சில்வா மரத்தில் கட்டிவைத்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையையடுத்து ஜனாதிபதியினால் பதவி நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே, தான் மீண்டும் பதவிக்கு வருவார் என மேர்வின் சில்வா கூறியுள்ளார். அதேவேளை, தனக்கெதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முடிவுகள் குறித்துதனக்கு கரிசனை இல்லை எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
"நான் அமைச்சராக இல்லாவிட்டால், எனக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என சிலர் கேட்கிறார்கள். எனக்குள்ள அச்சுறுத்தல் காரணமாகவும் இந்நாட்டின் பிரஜை என்ற வகையிலும் எனக்கு பாதுகாப்பு வழங்குவது அங்கத்தின் கடமையாகும். அப்பாதுகாப்பு இல்லாவிட்டாலும் நான் எனது சொந்த ஆட்களை அதற்குப் பயன்படுத்துவேன்" மேர்வின் சில்வா என கூறினார்.
இதேவேளை, மேர்வின் சில்வாவினால் மரத்தில் கட்டப்பட்ட சமுர்த்தி உத்தியோகஸ்தர் தனது தவறையும் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் ஏற்றுக்கொண்டபோது சமுர்த்தி ஊழியர்கள் எதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என களனி பிரதேச சபை அங்கத்தவர் மில்ரோய் பெரேரா கேள்வி எழுப்பினார்.
"எமது பிரதியமைச்சரை பதவியிலிருந்து நீக்குவதற்கு திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளார்கள். இவ்விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தீர்மானத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் எனக் கோருகிறேன்" எனவும் அவர் கூறினார்.
Pix: Kushan Pathiraja





28 minute ago
33 minute ago
40 minute ago
2 hours ago
waz Friday, 13 August 2010 12:22 AM
மீண்டுமா? ஏன்? செயலகங்கள் தோறும் மாமரம் வளர்க்க வேண்டியதுதான்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
33 minute ago
40 minute ago
2 hours ago