Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்துக்கான சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கொழும்பில் இன்று பாரியளவிலான ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்டன.
அரசாங்கத்துக்கும் மேற்படி அரசியலமைப்பு திருத்தத்துக்கும் ஆதரவளிக்கும் வகையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணிகளின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படம் பொறிக்கப்பட்ட பதாதைகள் ஏந்தியவாறு பேரணிகள் இடம்பெற்றன.
இதேவேளை, அரசாங்கத்துக்கும் அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்துக்கும் எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணிகளில் கலந்துகொண்டவர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்தவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. Pix By :- Kithsiri De Mel & Nishal Baduge
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
4 hours ago
5 hours ago