2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

மாண்ட உயிரை மீட்குமா சாட்சிகள்...

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு நேற்று சனிக்கிழமை (18-09-2010) கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது 300இற்கும் அதிகமான பொது மக்கள் கலந்து கொண்டு தமது சாட்சியங்களைப் பதிவு செய்துகொண்டனர்.

இவர்களில் பெரும்பாலானோர் வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது கைது செய்யப்பட்ட தமது உறவுகளை விடுவிக்குமாறு கண்ணீரும் கம்பலையுமாக ஆணைக்குழு உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

ஒரே சமயத்தில் 300இற்கும் அதிகமானோரின் சாட்சியங்களினைப் பதிவு செய்ய முடியாத சூழ்நிலையில், அநேகமானோரின் சாட்சியங்கள் கடிதங்களாகப் பெறப்பட்டன.

இதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை பரந்தன், கண்டாவளை, பூநகரி ஆகிய பகுதிகளுக்கும்- நாளை திங்கட்கிழமை முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், மாங்குளம், விசுவமடு, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கும் சென்று மக்களின் சாட்சியங்களைச் சேகரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--