Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 08 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலுள்ள கால்வாய்களினூடான நீரியல் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நிகழ்வு இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய கடற்படைத் தளபதி
வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்கவின் வழிகாட்டலின் பேரில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
கடற்படை வீரர்கள், பாடசாலை மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட இந்த நீரியல் விளையாட்டுப் போட்டிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தார். கால்வாய்கள் உட்பட உள்நாட்டு நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் கடற்படையினரால் புதிய செயற்திட்டத்தின் கீழ் இப்போட்டிகள் நடத்தப்பட்டன.
கொழும்பிலுள்ள கால்வாய்களினூடாக பொதுமக்கள் போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் அவற்றினூடான விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி குறித்த நீர் நிலைகளைப் பாதுகாப்பதே இந்த செயற்திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.
அந்தவகையில், கடந்த மே மாதம் கிருளப்பனை கால்வாயினூடாக வெள்ளவத்தை முதல் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று கால்வாய்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.Pix by :- Kushan Pathiraja
5 hours ago
8 hours ago
9 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago
19 Sep 2025