Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட நவராத்திரி விழா இலங்கை சுற்றுலாசபை கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிரதி பொருளாதார அமைச்சர் முத்துசிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவானது, முதலில் பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமானதுடன், அதன் பின்னர் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இதேவேளை, இங்கு வரவேற்புரை நிகழ்த்திய பிரதி பொருளாதார அமைச்சர் முத்துசிவலிங்கம், சிங்கள மற்றும் தமிழ் மக்கள் எந்தவித பாகுபாடின்றி இவ்விழாவில் கலந்து கொண்டுள்ளதாகவும் இது தனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கூறினார். "இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றாக நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாகும். இந்துக்கள் கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து முப்பெரும் தேவியரைப் போற்றி இவ்விழாவைக் கொண்டாடுவர். நவராத்திரி என்பது ஒன்பது இரவுகள் ஆகும்.
இந்நிலையில் முதல் 3 நாள்களும் வீரத்தை தரும் துர்க்கையையும் அடுத்த மூன்று நாள்களும் செல்வத்தை தரும் லக்ஷ்மியையும் இறுதி மூன்று நாள்களும் கல்வியைத் தரும் சரஸ்வதியையும் போற்றி இந்நவராத்திரி விழாவை இந்துக்கள் கொண்டாடுவர். பத்தாம் நாளன்று கோயில்கள் மற்றும் பாடசாலைகளிலும் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த பத்தாம் நாளில் ஏடு தொடக்குதல் போன்ற சுபகாரியங்கள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான நவாரத்திரி விழாவின் ஆறாம் நாளான இன்று லக்ஷ்மி பூஜையின் இறுதி நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது. Pix by :- Nishal Baduge
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
3 hours ago
5 hours ago