2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

சிறிய மத்திய ஆடைத் துறைக்கான மாநாட்டில் அமைச்சர் றிசாட் பதியுதீன்

Super User   / 2010 ஒக்டோபர் 30 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

சிறிய மற்றும் மத்திய ஆடைத் துறைக்கான சார்க் மாநாடு கடந்த 28ஆம் 29ஆம் திகதிகளில் இந்தியாவின் சென்னை நகரில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் இலங்கை சார்பாக கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உறுப்பினர் ரோஹான் டீ அத்துகோரள, சென்னை பிரதி உயர் ஸ்தானிகர் கிரிஷ்ண மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தெற்காசியாவில் உள்ள நாடுகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று  கைத்தொழில் துறையை மேம்படுத்துவதாகும். பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்புடனேயே கைத்தொழில் துறை மேம்பாடுகளுக்கான திட்டங்கள் நகர்த்தப்பட வேண்டும் என மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் றிசாட் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .