2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

செயற்கையினால் மறுவாழ்வு...

Menaka Mookandi   / 2010 நவம்பர் 10 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

விபத்து மற்றும் போர் காரணமாக கால்கள் கைகளை இழந்தவர்களுக்கும் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செயற்கை அவயவங்கள் பொருத்தும் வள நிலையம் இன்று புதன் காலை 10 மணியளவில்  வவுனியா மாவட்ட அரசினர் பொதுவைத்தியசாலையில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் அனுமதியுடன் ஐப்பான் அரசின் நிப்போன் அமைப்பும் கம்போடியா நிதியமும் இணைந்து இந்த நிலையத்தினை வவுனியா வைத்தியசாலையில்  ஆரம்பித்துள்ளனர்.

சுகாதார அமைச்சில் கடமையாற்றும் பணிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் அனில் திசாநாயக்கா மற்றும் ஐப்பான் கம்போடியா நாட்டு அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையத்திற்கு வவுனியா வைத்தியசாலை ஊடாகவே பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என வவுனியா வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

மக்களுடைய நலன் கருதி இந்த சேவைத் திட்டம் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடும் அதிகாரிகள்  றாகமையில் இது தொடர்பான பயிற்சி பாடசாலை உள்ளது. அங்கு பயிற்சி பெற்றவர்கள் இந்த வள நிலையத்தில் கடமையாற்றுகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கு அவயவங்கள் பொருத்தக்கூடிய வசதிகள் இங்கு உள்ளன.

யுத்தம் முடிவிற்கு வந்துள்ளதினால் கடந்த காலத்தில் கண்ணிவெடிகளில் அகப்பட்டும் போரின்போது சிக்கி அவயவங்களை இழந்தவர்களும் இந்த நிலையத்தின் ஊடாக நன்மையடைவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .