2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

தேசிய நேர்மைத்திறன் விருது...

Super User   / 2010 டிசெம்பர் 09 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


ட்ரான்ஸ்பரன்ஸி இன்டநெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய நேர்மைத்திறன் விருது வழங்கும் விழா இன்று வியாழக்கிழமை மாலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டத்தில் இடம்பெற்றது.

இந்நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜே.ஸி வெலியமுன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நேபாள நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான கானக் மானி தீக்ஷிட் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

2010ஆம் ஆண்டுக்கான சர்வதேச நேர்மைத்திறன் விருதை புலனாய்வு ஊடகவியலாளர் பொத்தல ஜயந்தவின் சார்பில் அவரின் பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை 2010ஆம் ஆண்டுக்கான தேசிய நேர்மைத்திறன் விருதை 2001ஆம் ஆண்டு களனி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட உதவி சுங்க அதிகாரியான காலஞ்சென்ற சுஜித் பிரசன்னவுக்கு வழங்கப்பட்டது.

கிண்ணியாவைச் சேர்ந்த அதிபரும் மௌலவியுமான எம்.வை. ஹிதாயதுல்லாவுக்கு 2010ஆம் ஆண்டுக்கான தேசிய நேர்மைத்திறன் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

ஊழலை ஒழிப்பதற்காக தங்களை அர்ப்பணித்திற்காகவே இவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(Pix By: Nisal Baduge)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--