2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

யாழில் ஜனாதிபதிக்கு கௌரவம்...

Menaka Mookandi   / 2011 ஜனவரி 17 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கிரிசன்)

தேசிய தைப்பொங்கல் விழா நிகழ்வுகள் இன்று பகல் 10.10 மணியளவில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

இந்நித நிகழ்வின்போது 42 உழவு இயந்திரங்கள் விவசாயிகளுக்கு கையளிக்கப்பட்டன. அத்துடன், யாழ் மாவட்டத்தில் உள்ள 34 இந்து கோவில்களை புனரமைப்புச் செய்வதற்க்காக 34 இலட்சம் ரூபாவை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதி கையளித்தார்.

அத்துடன் யாழ் மாவட்டத்தில் முதலிடங்களைப் பெற்ற நூறு மாணவ மாணவிகளுக்கு மடி கணினிகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் இதன்போது கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--